#1:
ஆண்ட்ராய்ட் பதிப்பு 6.0 மார்ஷ்மலாய் இயக்கத்தில், கூகுள் ஒரு புதிய வசதியாக Doze Mode என்னும் டூல் ஒன்றை அறிமுகம் செய்தது. நம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இல்லாத போது, அதனை ஆழ்ந்த உறக்கத்தில் கட்டாயமாக வைத்து விடும். எடுத்துக் காட்டாக, போனைப் பயன்படுத்தாமல், டேபிளின் மீது அல்லது படுக்கையில் வைத்துவிட்டால், இந்த டூல் தானாக செயல்பாட்டிற்கு வந்து, பேட்டரியின் பயன்பாட்டைப் பெரும் அளவில் மிச்சப்படுத்தும்.
#2:
ஆண்ட்ராய்ட் போன்களில், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலைப் பயன்பாட்டு வசதிகள் அனைத்தும், பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, புளுடூத் ஹெட்செட் பயன்படுத்தவில்லை எனில், புளுடூத் வசதியை எப்போதும் அணைத்தே வைக்கலாம். ஜி.பி.எஸ். வசதியை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இதனையும் அணைத்தே வைக்கலாம்.
#3:
ஏதாவது அப்ளிகேஷன் அல்லது சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யும்போது, ஏற்கனவே இருக்கிறத தேவையில்லாத அப்ளிகேஷனை அன்இன்ஸ்டால் செய்வது நல்லது. (Uninstall unwanted application) நிறைய அப்ளிகேஷன்களோட டவுன்லோட் செய்யும்போது டவுன்லோட் வேகம் பாதிக்கும்.நிறைய அப்ளிகேஷன்கள் இருந்தால் பேட்டரியின் பயன்பாடு அதிகமாகும்.
#4:
நிறைய நேரம் கரண்ட்ல போட்டா நிறைய சார்ஜ் ஏறிடும்னு நாம நம்பறோம்..அதுதாங்க தப்பு... அந்த பேட்டரிக்குன்னு ஒரு கெபாசிட்டி இருக்கு...குறிப்பிட்ட நேரத்துல... குறிப்பிட்ட அளவுதான் அது சார்ஜ் பண்ணிக்கும்.. அதுக்க மேலயும் நீங்க கரண்ட்ல போட்டு வச்சிருந்தாலும் சார்ஜ் ஆகாவே ஆகாதுங்க...
இப்படி ரொம்ப நேரம் சார்ஜ் போட்டிருந்தால்... அந்த பேட்டரி சூடாகுமே தவிர, அந்த கெபாசிடிக்கு மீறி துளிகூட பேட்டரில கரண்ட் தங்காதுங்க... பேட்டரி சூடேறிச்சுன்னா..அப்புறம் சொல்லவே வேண்டாம்.. இது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும்...கடைசியில ரிப்பேர்தான் ஆகும்.
#5:
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், கீகளை அழுத்தும் போது, மெலிதான அதிர்வு கிடைக்கும். இதுவும் பேட்டரி திறனைக் குறைக்கும் என்பதால், இந்த வசதி பலருக்குத் தேவை இல்லை என்பதால், இதனை நிறுத்தி வைக்கலாம்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், பின்னணியில் தொடர்ந்து தேவையின்றி இயங்கும் செயலிகளைத் தானாகவே, “தூக்க நிலைக்குக்” (Sleep Mode) கொண்டு செல்லும் ஓர் அப்ளிகேஷன் “கிரீனிபை” (Greenfly) ஆகும். இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்திட, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்திட வேண்டும். விருப்பப்பட்டால், இன்ஸ்டால் ஆனவுடன், நேரடியாகக் குறிப்பிட்ட செயலிக்குச் சென்று, இதனை இணைத்துச் செயல்படுத்தலாம்.
|
No comments