ஐபிஎல்:புள்ளி பட்டியலில் முன்னேறியது மும்பை அணி!
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் மோதின.
Third party image reference
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் 12, ராயுடு 46, தோனி 26, பிராவோ ரன் எடுக்காமல், சாம் பில்லிங்ஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்தார்.
குருணால் பாண்டயா, மெக்ளினாகன் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
Third party image reference
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.19.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது.
சூர்யகுமார் 44, லூயிஸ் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களும், ஹார்திக் பாண்டயா 16 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். நடப்பு சாம்பியனான மும்பை அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது வெற்றியாகும். சென்னை அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
Third party image reference
No comments