ஐபிஎல் :அணிகளின் புள்ளி பட்டியல் முதலிடத்தில் சென்னை அணி!
பெங்களூரு: இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மற்றொரு கடைசி ஓவர் சூப்பர் திரில் வெற்றியைப் பெற்றது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, ராயுடு அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது.
பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்தது. குயின்டான் டி காக் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூரு அணி, 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்ஸ்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார்.
206 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் துவக்கிய சிஎஸ்கே அணி, வாட்சன் 7, ரெய்னா 11, சாம் பில்லிங்க் 9, ஜடேஜா 3 ஆகியோரை இழந்து 8.6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்று திண்டாடியது. அப்போது ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு, தோனி அதிரடியாக விளையாடினர். ராயுடு 82 ரன்களும், தோனி கடைசி வரை நின்று 70 ரன்களும் எடுக்க சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஒரு திரில் வெற்றியை சிஎஸ்கே பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

No comments