ஐபிஎல்-2018:அணிகளின் புள்ளி பட்டியல் இரண்டாம் இடத்தில்சென்னை அணி!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முயற்சியில் அனைத்தும் அணிகள் ஈடுபட்டுள்ளன.
நேற்று நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லியில் நடந்த 22வது ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு சுருண்டது. கடைசி பந்து வரை நடந்த பரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.டெல்லி டேர்டெவில்ஸ் 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தற்போதுள்ள புள்ளி பட்டியல் படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 2-ம் இடத்திலும், கொல்கத்தா அணி 3-ம் இடத்திலும்,ஹைதராபாத் அணி 4ம் இடத்திலும் உள்ளது.


No comments